YouTurn

கலைஞரின் உடல்நிலை..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கலைஞருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக தொற்றுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலைஞரின்...

கலைஞரின் உடல்நிலை..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கலைஞருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக தொற்றுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். 



இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும், பல மாநில அரசியல் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் சார்பில் ட்விட்டர் பதிவுகள் மற்றும் தொலைபேசி வாயிலாக கலைஞரின் நலம் குறித்து பேசி வருகிறார்கள். 



இந்த பரபரப்பான நிலையில் கலைஞரின் உடல்நலம் குறித்து வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 





கலைஞர் உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அவர் நலமுடன் உள்ளார். மேலும், சிகிச்சை நடைபெறுவதால் தொண்டர்கள், மக்கள் தலைவரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார்.  





திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த துரைமுருகன் அவர்கள், " நான் ஏன் பொய் சொல்ல போகிறேன். தலைவரின் உடல்நலம் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது " என்றுள்ளார். வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை