YouTurn

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸ்.

பின்லாந்து நாட்டின் தாம்ப்ரே நகரில் 2018 ஆம் ஆண்டிற்கான 20 வயதுக்குட்பட்டவருக்கான உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.  உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டியில்...

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸ்.

பின்லாந்து நாட்டின் தாம்ப்ரே நகரில் 2018 ஆம் ஆண்டிற்கான 20 வயதுக்குட்பட்டவருக்கான உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 





உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டியில் இந்தியா தங்கம் வென்றது இல்லை. அந்த சாதனையை நிகழ்த்தி தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை  பெற்றார் அஸ்ஸாமை சேர்ந்த ஹிமா தாஸ். 18 வயதே ஆன ஹிமா தாஸ் 400 மீட்டர் தொலைவை 51.46 நொடிகளில் கடந்து வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.



அஸ்ஸாமில் உள்ள திங் கிராமத்தின் ஒரு விவசாயின் மகள் தான் ஹிமா தாஸ். 2016-ல் அவருக்குள் இருந்த தடகள திறமையை அவரின் பயிற்சியாளர் நிபுன் தாஸ் கண்டறிந்துள்ளார். முதல் போட்டியான அஸ்ஸாம் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார்.





பிப்ரவரி 2017-ல் பள்ளிகளுக்கான தேசியப் போட்டியில் 100 மற்றும் 2­00 மீட்டர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்றார். தடகளப் போட்டியில் மட்டுமே ஆர்வமாக இருந்த ஹிமா வை அவரது பயிற்சியாளர்கள் நிபுன் தாஸ் மற்றும் நபாஜித் மலகார் ஆகியோர் பண உதவி செய்து உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதில், 5-வது இடத்தை பிடித்தார்.



இப்போட்டிக்கு முன்பாக நான்கு மாத தொடர் பயிற்சியே அவரின் சாதனைக்கு காரணம் இந்த ஆண்டில் படியாலா, ஜகர்தா, குவாஹதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் 100, 200, 400   மீட்டர் போட்டிகளில் ஹிமா வின் வேகம் அதிகரித்துள்ளது.



தன் தொடர் முயற்சியால் இந்திய தடகள வீரராக மாறினார். இந்தியாவின் சார்பாக பின்லாந்தில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியின் 400 மீட்டர் அரையிறுதியில் மற்ற வீரர்களை விட அதிக வேகத்தில் சென்று தேர்வாகினார். 52.25 நொடியில் செல்ல வேண்டியதை 52.10 நொடியில் சென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 





இறுதிப் போட்டியில் 51.46 நொடிகளில் கடந்து தங்கத்தை தனதாக்கியுள்ளார். அவரின் சாதனையைப் பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஹிமா தாஸ்-ஐ நினைத்து பெருமைப்படுவதாகவும், இளம் தடகள வீராங்கனைகள் உருவாக்க இந்த வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.  





இந்தியக் கொடியை எனது தோளில் சுமப்பதை பெருமையாக நினைக்கிறன். என் நாட்டிற்கும், சக வீரர்களுக்கும் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இறுதி 100 மீட்டரில் தான் எனது முழு வலிமையும் இருந்தது. அடுத்து ஆசியப் போட்டியில் விளையாட வேண்டும், ஆனால் என் கனவு ஒரு நாள் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே “ என்று ஹிமா தாஸ் தெரிவித்தார்.



அந்நிய மண்ணில் முதல் முறையாக தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸ் உடைய வெற்றி எதிர்காலத்தில் தடகளப் போட்டியில் பல வீராங்கனைகளை உருவாக்க உதவும் திறவு கோல். 



 



All you need to know about hima das 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை