அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கு வாய்ப்பு..!
மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கனவு கடினமாகியது. எனினும், சில அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி பெற்று தேர்வை எதிர் கொள்ள விருப்பம் இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் நீட் தேர்வை...

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கனவு கடினமாகியது. எனினும், சில அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி பெற்று தேர்வை எதிர் கொள்ள விருப்பம் இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் நீட் தேர்வை எதிர் கொள்ள முடியவில்லை.
அவ்வாறு விருப்பமும், திறமையும் இருந்து நீட் பயிற்சிக்காக தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. " Phoenix NEET academy " என்ற பயிற்சி நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்த 30 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாகவே நீட் பயிற்சி அளிப்பதாக தெரிவித்து உள்ளனர். 30 மாணவர்களுக்கு நெய்வேலியில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வை எதிர் கொள்ள முழுமையான ஒரு வருட இலவச பயிற்சி அளிக்கப்படும். மாதிரித் தேர்வுகளை மதுரை, நெய்வேலி, சென்னை, பெரம்பலூர், நாகர்கோவில் பகுதியில் உள்ள மையங்களில் எழுதலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என Phoenix NEET academy அறிவித்துள்ளது. இது தொடர்பாக " youturn " மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். கொடுக்கப்பட்ட விவரங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
தொடர்பு கொள்ள : 9787973729, 9791741545 , online test: https://myswots.com/client/phoenix30