YouTurn

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுமதிப்பீட்டில் முறைகேடு..!

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றாலோ மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பல மாணவர்கள் மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதும், அதற்காக அவர்கள் செலுத்திய ரூ.700 ஆல் கோடிக்கணக்கில் வசூல்...

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றாலோ மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பல மாணவர்கள் மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதும், அதற்காக அவர்கள் செலுத்திய ரூ.700 ஆல் கோடிக்கணக்கில் வசூல் ஆகியது என்று சமூக வளைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியது. ஆனால், அந்த மறுமதிப்பீட்டு கூட்டலில் நடந்த முறைகேடு சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளது.



தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த புகாரால் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களின் மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு பேராசிரியர்கள் லஞ்சம் பெற்றது உறுதியாகியது.



தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2017-ல் ஏப்ரல்-மே நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீட்டு கூட்டல் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பேராசிரியர்கள் மாணவர்களிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்று கூடுதல் மதிப்பெண் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ததும் அம்பலமாகியுள்ளது.



2017-ல் ஏப்ரல்-மே நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் இருந்து 3,02,380 மாணவர்கள் மதிப்பெண் மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணபித்தனர். ஆகஸ்ட் 2017-ல் நடைபெற்ற மறுமதிப்பீட்டில் 73,733 தேர்ச்சி பெற்றனர் மற்றும் 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் திண்டிவனத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு செய்த பேராசிரியர்கள் சிக்கினர். அவர்கள் தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் அறிவுத்தலின்படி நடந்ததாக தெரிவித்தனர்.



அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக்கட்டுப்பாடு அலுவலராக பேராசிரியர் உமா 2015 முதல் 2018 வரை பதவி வகித்து உள்ளார். தற்போது Department of information science and technology பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை தவிர்த்து திண்டிவனம் மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயக்குமார், சிவக்குமார், சுந்தர்ராஜன், மகேஷ்பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரதீஸ்வரர், கண்ணன், ரமேஷ் என 9 பேரும் இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மறுமதிப்பீடு செய்த வினாத்தாள்கள், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என பல கிடைத்ததாகவும், திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பலவற்றை பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைக்கு மீறி அழித்து உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் நேரடியாகவே முறைகேடில் ஈடுபட்டதால் கோடிக்கணக்கில் பணம் கை மாறி இருக்கும் என்பது உண்மை. இருப்பினும், மூன்று ஆண்டுகளில் 300, 400 கோடி லஞ்சம் பெற்று இருப்பார்கள் என கணிப்பு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அளவிற்கு லஞ்சம் வாங்கி உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாவில்லை.



மதிப்பெண் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கூறுகையில், “ முறைகேடு பல்கலைக்கழக வளாகத்தின் எந்தவொரு இடத்திலும் நடைபெறவில்லை, பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் மட்டுமே நிகழ்ந்து உள்ளது. முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் உமா சஸ்பென்ட் செய்யப்படுவதாக அறிவித்தார் “. மற்ற பேராசிரியர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.



குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்படுவதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.



அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடைபெறுவது இது முதல் முறை அல்ல. 2012-ல் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண்கள் வழங்க உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக இரண்டு பேராசிரியர்கள் குற்றம் சுமத்தினர். அதனால் அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.



2013-2016-ல் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜாராம் உள்பட 6 பேர் மீது DVAC வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



DVAC uncovers revaluation scam at Anna University



Anna University re-evaluation scam: Former controller of exams G V Uma suspended from varsity 

 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை